இலங்கையின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரம சிங்கே உறுதியளித்துள்ளார்.
இலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்நாட்டு பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரம சிங்கே பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் அலரி மாளிகையில் உரையாற்றிய ரணில், வளர்ச்சி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இலங்கை சரிவை எதிர் நோக்கியுள்ளதாக வேதனை தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும், மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ரணில் உறுதி அளித்தார்.
ரணில் பிரதமராக பதவியேற்றதையடுத்து அவரது கட்சியினர் மற்றும் தமிழர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.