இலங்கையில் அரசியலில் குழப்பமும், பரபரப்பும் தொடரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கி, ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். அதைத் தொடர்ந்து, பல அதிரடி திருப்பங்களுடன், இலங்கை அரசியல் குழப்பத்தின் உச்சகட்டத்தை அடைந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதில், ராஜபக்ச தோல்வியை தழுவியதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றமும் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட பரபரப்பாக, ரணில் விக்ரமசிங்க, இன்று அல்லது நாளை, மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.