பிரதமராக தொடர்வதாக ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு – இலங்கை அரசியலில் புதிய குழப்பம்

தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிவிப்பால், இலங்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமனம் செய்துள்ளது, சட்டப்படி தவறானது என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தான் இன்னும் பிரதமராக தொடர்வதாக அவர் கூறியுள்ளதால், இலங்கையில் அரசியல் சாசன சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டு அரசியல் சாசனத்தின் 19-வது திருத்தத்தின்படி மெஜாரிட்டி இல்லாத அதிபர் மைத்திரிபால் சிறிசேனவால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்க முடியாது என்று தெரிவிக்கிறார்கள்.

எனவே இப்போது இலங்கையில் இரு பிரதமர்கள் பதவி வகிப்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக, இலங்கை அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version