அன்புமணி ராமதாஸூடன் ரங்கசாமி சந்திப்பு

பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸை, புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்துக்கு, புதுவை முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி சென்றார். அப்போது அன்புமணி ராமதாஸ் ரங்கசாமியை பொன்னாடை போர்த்தி, வரவேற்றார்.

இதையடுத்து இருவரும் சுமார் 2 மணிநேரம் உரையாடினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி , இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.

Exit mobile version