மாநிலங்களவைத் தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி போட்டி

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் செய்துகொள்ளப்பட்ட தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக உயர்நிலைக்குழு கூட்டத்தில்  மாநிலங்களவைக்கு போட்டியிட அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். 

Exit mobile version