அதிமுக தலைவர்களை அன்புமணி ராமதாஸ் குறை சொல்வது ஏற்புடையதல்ல – புகழேந்தி

கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக தலைவர்களை அன்புமணி ராமதாஸ் குறை சொல்வது ஏற்புடையதல்ல என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

அண்மையில் அதிமுக குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். அதில் பா.ம.க இல்லாமல் அதிமுக 20 இடங்களில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பதிலளித்தார். சட்டப்பேரவை தேர்தலில், செல்வாக்கு மிகுந்ததாக சொல்லப்படும் தொகுதிகளில் கூட பாமக பெருவாரியான இடங்களில் தோல்வியையே சந்தித்ததாகக் கூறினார்.

Exit mobile version