பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தோருக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ படிப்பில் சேர தொழில்நுட்ப கல்வித்துறை ஒற்றைச்சாளர முறையை பின்பற்றுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே-2 ஆம் தேதி விநியோகம் செய்யத் துவங்கி, 31-ல் முற்றிலும் பெற்று முடிக்கப்பட்டது. அதில் சுமார் ஏறக்குறைய 1 லட்சத்தி 32 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒரே கட் ஆஃப், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றில் பிறந்தவர்களில் யாருக்கு முன்னுரிமை என்பதை நிர்ணயிக்கும் சம வாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் இன்று வெளியாகிறது. நண்பகல் 3:00 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், ரேண்டம் எண்ணை வெளியிட உள்ளார்.