பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி மாற்றம்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த வாரம் நடைபெற்றது.

இந்தநிலையில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 17 ஆம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version