ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் 30 நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதாக தெரிவித்துள்ளனர்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், பிணியுற்றவர்களை சென்று பாருங்கள் என்று ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து, நபிகள் நாயகம் எடுத்துரைத்துள்ளதை பின்பற்றி வாழ உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றால் நம்மை சுற்றி வாழுகின்ற மக்கள் பலரும் அல்லல்பட்டு வரும் இந்த வேளையில் நம்முடைய அன்பும், ஈகையும், அவர்களுக்கு தாராளமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
இந்த இனிய திருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் தங்களது இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.