ரமலான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். ஈகை நோன்பு முடிந்த 30ஆம் நாள் பிறை கண்ட பின்பு கொண்டாடப்படும். அந்த வகையில், மதுரை தமுக்கம் மைதானம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். புத்தாடை அணிந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். உலக நன்மை வேண்டியும் மழை வேண்டியும் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புத்தாடை அணிந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Exit mobile version