மழை வேண்டி பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவில்பட்டியில் உலக நன்மைக்காகவும், மற்றும் மழை வேண்டியும் பள்ளி வாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள டவுண்பள்ளி வாசலில் ரமலான் சிறப்பு தொழுகையும், அதனை தொடர்ந்து உலக மக்கள் ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். இதே போன்று கோவில்பட்டி முகம்மதுசாலியாபுரம், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version