தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதிநாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ரமலான் மாத நோன்பு நேற்றுட நிறைவடைந்த நிலையில், இன்று ரம்ஜான் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மற்றும் புதுவையில் பிறை தெரிந்ததால், இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி முறைப்படி அறிவித்துள்ளார்.