ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த மாதம் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர். அதன்படி, நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள ஜாமா மசூதியில் ரம்ஜானை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமானோர் இதில் பங்கேற்று, ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஹமீதா மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமானோர் இதில் பங்கேற்று இறைவனை தொழுதனர். புத்தாடை அணிந்து வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவரும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.