தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக, ஆண்டுதோறும் ரமலான் நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பிறை தமிழ்நாட்டில் இதுவரை தென்படாத நிலையில், நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி, சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். அதேபோல ரமலான் நோன்பை ஒட்டி, இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் தராவீஹ் தொழுகையை, முகக்கவசம் அணிந்து, பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றி, இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.