காந்தி சிலையை திறக்க நாளை சென்னை வருகிறார் ராம்நாத் கோவிந்த்

தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தியாகராய நகர், இந்தி பிரச்சார சபாவில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர், அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்கிறார்.

Exit mobile version