ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் போலி ரசீது தயாரித்து ரூ.78 லட்சம் நிதி கையாடல்

ராமேஸ்வரம் கோவில் ஊழியர்கள் இரண்டு பேர் 74 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஊழியர்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதியை, கோயில் அலுவலகத்தில் கணினி பிரிவில் வேலை பார்த்து வந்த, சிவன் அருள்குமரன் என்பவர் போலி ரசீது தயாரித்து 78 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் மீதும் , கணக்கர் ரவிந்திரன் மீதும், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றபிரிவு ஆய்வாளர், குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version