ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

தனியார் மீன் கொள்முதல் நிறுவனங்கள், மீன்களுக்கு உரிய விலை வழங்காததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

60 நாட்கள் மீன் பிடி தடை காலம் முடிந்த நிலையில், கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். இறால், நண்டு மற்றும் எற்றுமதி மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்களுக்கு, உரிய விலையை மீன் கொள்முதல் நிறுவனங்கள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version