ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு நாட்களாக  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள்,  அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து இன்று கடலுக்குச் சென்றனர்.

இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு
விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், உலர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவித ஜீ.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை முன்வைத்து 23 ந் தேதி முதல் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கைகளை 10 தினங்களில் நிறை வேற்றித் தருவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில், வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

Exit mobile version