கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் குமார்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து எடியூரப்பா அரசு வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை வழங்கிய அடுத்த நொடியே பேரவையை விட்டு ரமேஷ்குமார் வெளியேறினார். 14 மாதங்கள் 4 நாட்கள் சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் தற்போது ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த கே.ஜி.போபய்யா என்பவர் அடுத்த சபாநாயகராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version