ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி

கொரோனா தடுப்பு நிவாரணத்திற்காக தமிழகம், ஆந்திரா மாநிலங்களுக்கு தலா இரண்டரை கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது.  ஆலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மளிகைப் பொருட்களையும் ராம்கோ சிமெண்ட்ஸ் விநியோகித்துள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு PPE கவச உடைகள், தெர்மல் ஸ்கேனர்கள், முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி மருந்துகளையும் ராம்கோ சிமெண்ட்ஸ் வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி 3 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களையும், மாநில அரசுகளுக்காக ராம்கோ சிமெண்ட்ஸ் அளித்துள்ளது. ஏற்கனவே, தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இரண்டரை கோடி ரூபாயும், ஆந்திர முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இரண்டரை கோடி ரூபாயும் வழங்கிய ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், 2 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்களை ஒடிஷாவுக்கு அளித்துள்ளது.

Exit mobile version