அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் அதாவது 725 அடியில் ராமர் சிலை அமைக்க உத்தர பிரதேச அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வெண்கலத்தில் ராமர் சிலை அமைக்க, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
ராமர் சிலை உயரம் மட்டும், 151 மீட்டர் என்றும் அடித்தள பீடத்தின் உயரம் 50 மீட்டர், ராமரின் தலைக்கு மேல் அமையும் குடையின் உயரம் 20 மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் சிலை சரயு நதிக்கரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அயோத்தியில் நிறுவப்பட உள்ள ராமர் சிலை குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட, மிக உயரமானதாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.