ராமநாதபுரம்-தூத்துக்குடி எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம்: இடைக்காலத் தடை

ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு குழாய் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு 700 கோடி ரூபாய் செலவில், எரிவாயு குழாய் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், ஆனால், இந்த திட்டத்திற்காக சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு தடை கோரியிருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், திட்டம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.

Exit mobile version