ஆறு மாதங்களுக்குப் பின், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட, இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காணரமாக, ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட மற்றும் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, சுவாமி தரிசனத்திற்கும் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
6 மாத காலமாக தீர்த்தக் கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதனை நம்பி வாழும் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து, தீர்த்தக் கிணறை திறக்க அவர்கள் வலியுறுத்திய நிலையில், இன்று முதல் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, கொரனோ வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி வருகின்றனர்.
செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள
↕↕↕ ↕↕↕