ராமநாதபுரத்தில் 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அருகே கடல் வழியாக கடத்தப்படவிருந்த 8 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுமடத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோபு என்பவர் தோட்டத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக 152 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கோபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version