மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதை அடுத்து மீனவர் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அமலில் இருந்து வருகிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, தஞ்சை, சென்னை, திருவள்ளுர், உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் 2011 ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நாளையுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும், உரிய ஆவணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும், எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.