ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.38 கோடி செலவில் தூர்வாரப்படும் 70 கண்மாய்கள்

கமுதி மலட்டாறு நீர் வரத்து பகுதியிலுள்ள கால்வாய்களை தூர்வாறும் பணிகள் துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில், மழை நீரை சேமிக்கும் வகையில் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களை தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. மொத்தம் 70 கண்மாய்களை தூர்வாரும் பணிக்காக, மாவட்ட ஆட்சியர் 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், இந்த குடிமராமத்து பணிகள் முழுவதும், பதிவு பெற்ற விவசாய சங்கத்தின் நியமன முறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், 5 பொறுப்பாளர்கள் கொண்ட குழுவில் 51 பேர் வரை சேரலாம் என்று கூறினார்.

மேலும், விவசாயிகளுக்கு மட்டுமே பணியை செய்ய உரிமை உள்ளது என்றும், ஒப்பந்தராருகளுக்கு அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பணி விவசாயிகளின் பங்களிப்போடு, கிராம மக்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version