இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்பட்டு வந்தவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாலை 4:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 94 வயதான ராமகோபாலன், 1980-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.