மனைவியுடன் வந்து வாக்களித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அவ்வையார்குப்பத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸூக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version