தைலாபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் அளித்த விருந்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு தனது இல்லத்தில் விருந்தளிக்க விரும்பினார்.
இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தைலாபுரம் இல்லத்துக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர். அவர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.