பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த பிரதமர் கருத்துக்கு ராமதாஸ் வரவேற்பு!!

பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த பிரதமரின் கருத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் பரிந்துரைப்படி சரியான முடிவு எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். மோடியின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பெண்ணின் திருமண வயது 21ஆக உயர்த்தப்பட்டதால் நுண்ணூட்டச் சத்துக் குறைவை கட்டுப்படுத்த உதவும் என தெரிவித்தார். பெண்களுக்கு இளம் வயதில் திருமண நடைபெறுவதாலும், தாய்மையடைவதாலும் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர்க்க பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவாக இருக்கும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version