ரமலான் மாத தராவீஹ் சிறப்பு தொழுகையை இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.
ரமலான் மாதங்களில் இஸ்லாமியர்கள் இரவு நேர தராவீஹ் தொழுகையை மேற்கொள்வது வழக்கம்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ஆண்டும் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடத்த அனுமதி வழங்க கோரி, தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, தராவீஹ் சிறப்பு தொழுகைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையை இரவு10 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான இடைவெளியுடன் தொழுகையை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.