யானைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வால்பாறையில் பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் யானை – மனித மோதல்கள் காரணமாக பல்வேறு மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் யானைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, கோவை வன அதிகாரி கணேசன் தலைமையில் வால்பாறையில் நடத்தப்பட்டது.
யானைகளை வாழ விடுங்கள் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவ மாணவியரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். பேரணியின்போது, மாணவர்கள் யானை குறித்த விழிப்புணர்வு பதாகைகளும், யானை முகமூடிகள் அணிந்து சென்றனர்.