தடையை மீறி பேரணி: ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடன் பேரணியாக சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் நேற்று தடையை மீறி பேரணி நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளான மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இந்த நிலையில், அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் உட்பட 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version