சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கைகளில், மஞ்சள் நூல் அல்லது அழகழகான டிசைன்களில் ராக்கி கட்டி மகிழ்கின்றனர். எல்லை காக்கும் ராணுவ வீரர்களுக்கு பெண்கள் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை வெளிக் காட்டினர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், உதம்பூர் போன்ற பகுதிகளில், பள்ளி மாணவிகள் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ராக்கி கட்டினர். தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தும், சகோதரிகளுக்கு, சகோதரர்கள் இனிப்புகள்,பரிசுகளைக் கொடுத்து மகிழ்வித்து வருகின்றனர். ஆண்டுகள் பல ஆனாலும், வாழ்த்து கூறுவதில் மாற்றங்கள் சில வந்தாலும், அன்பு மட்டும் மாறுவதில்லை.