காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

rajpath road to karthavya road

டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வளாகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படும் பகுதிகள் மற்றும் ஜனாதிபதி மாளிகை வரை செல்லும் ராஜ்பாத் சாலை பகுதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், காலனித்துவத்தை குறிக்கும் வகையில் உள்ள ‘ராஜ்பாத் சாலை’ என்ற பெயர் மாற்றப்பட்டு கடமையை குறிக்கும் விதமாக ‘கர்த்தவ்யா சாலை’ என அழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version