வீர மரணம் அடைந்த வீரர்களை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களின் சவப்பெட்டியை தன் தோளில் சுமந்து சென்றார்.

அஞ்சலிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வீர மரணம் அடைந்த வீரர்களை தன் தோளில் சுமந்த போது, உணர்ச்சிவசப்படுவதை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று உருக்கமாக கூறினார்.

Exit mobile version