லடாக் எல்லைப்பகுதியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படைகளின் தளபதியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே எல்லை பிரச்னை ஏற்பட்டதால், சீன ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியது. எல்லையில் அசாதாரண சூழல் நிலவியதால் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, எல்லைப் பகுதியில் இருந்து இருதரப்பு படைகளும் பின்வாங்கின. இந்நிலையில், லடாக் பகுதியில் தற்போதைய சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் முப்படைகளின் தளபதிகளுடனும் அவர் ஆலோசித்தார்.