ராஜிவ் கொலை வழக்கு : நளினியின் பரோல் 3 வாரங்கள் நீட்டிப்பு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினியின், பரோலை மேலும் 3 வாரங்களுக்கு  நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது….

மகளின் திருமண பணிகளுக்காக நளினி ஒரு மாத கால பரோலில் வந்துள்ளார். இதற்காக அவர் வேலூரில் தங்கி உள்ளார். தனது மகளின் திருமன வேலைகள் முடியாததால் மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. நளினிக்கு 3 வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், முன்பு விதித்த நிபந்தனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். நீதிமன்ற அனுமதியை அடுத்து நளினி செப்டம்பர் 15 ம் தேதி வரை பரோலில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.. 

Exit mobile version