ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டுகளில் நடைபெறாதநிலையில், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று காலாவதியான மனுவை திருத்தம் செய்து தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, கடந்த ஏப்ரலில் பதில் மனு அனுப்பிவிட்டதாக மத்திய அரசு அதில், குறிப்பிட்டுள்ளது.

மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான எந்த மனுவும் மத்திய அரசிடம் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version