ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட தாமதப்படுத்துவது ஏன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்சநீதிமன்றம் 7பேரை விடுதலை செய்திட தமிழக அரசுக்கு முழு உரிமை இருப்பதாக கூறி தமிழக அரசு 7 பேருக்கும் தனித்தனியாக ஆணைப் பிறப்பித்து தனிக் கோப்புக்கள் தயாரித்து சட்டமன்றத்தில் முடிவு எடுத்து 139 நாட்கள் கடந்த பின்னரும் தமிழக ஆளுநர் கையொப்பம் இடாதது ஏன் என்று தமக்கு புரிய வில்லை என குறிப்பிட்டார்.சட்டப்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப் படுத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.