ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருக்கும் நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் சத்துவாச்சாரியில் தங்கவுள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது மகளின் திருமணத்துக்காக, ஆறு மாதம் பரோல் கேட்டு, நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், அவருக்கு ஒரு மாத கால பரோல் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. நளினிக்கு ஜாமின் வழங்கியவர்கள் மற்றும் நளினி தங்க உள்ள இடங்கள் குறித்த விபரங்களை, அவரது வழக்கறிஞர் சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.
பரோல் காலத்தில் ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என நளினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.