ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி

தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அரசு, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காததன் மூலம், தாங்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தங்களை விடுதலை செய்ய உத்தரவிக் கோரியும் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காத வரை சட்டவிரோத காவல் என கருத முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நளினி உள்ளிட்ட 7 பேரும் சட்ட விரோதக் காவலில் இல்லை என மத்திய அரசு வாதாடியது. தங்களது அனுமதியின்றி தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நளியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version