பாஜக தேர்தல் அறிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

நதிகளை இணைக்க தனி ஆணையம் உருவாக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வரவேற்றார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், நதிகளை இணைத்தால் வறுமை ஒழியும் என்று கூறினார்.

Exit mobile version