பேட்ட முதல்நாள் காட்சியில் திருமணம் செய்து கொண்ட தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினி

பேட்ட திரைப்படம் கடந்த ஜனவரி 10ந் தேதி அன்று வெளியான போது சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட தம்பதியை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் ‘பேட்ட’ படம் பார்க்க வந்த ரஜினி ரசிகரான அன்பரசு தனது காதலி காமாட்சியை தியேட்டரிலேயே திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திருமணத்தை ரஜினி ரசிகர்கள் நடத்தி வைத்ததோடு, சீர்வரிசையையும் பரிசாக அளித்தனர். இந்நிலையில், விஷயம் அறிந்த ரஜினி, அன்பரசு – காமாட்சி ஜோடியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, பரிசும் வழங்கினார்.

image

image

image

Exit mobile version