ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரஜினி-கமல் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமண விழா பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் இல்லத்திற்கு நேரில் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். ரஜினி-கமல் இடையேயான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினர் கமீலா நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version