ரஜினி வாழ்வில் முக்கியமான நாள் இன்று..என்ன தெரியுமா?

ரஜினியின் வாழ்வில் எத்தகைய திரைப்படங்கள் நடித்து அது வெற்றிபெற்று சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தாலும், அப்போதெல்லாம் கிடைக்கும் சந்தோஷத்தை விட இன்று அவரது வாழ்வின் சந்தோஷம் நிறைந்த நாள் என்று சொன்னால் மிகையாகாது.ஆமாம்,இன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 38வது திருமண நாள்.பிப்ரவரி26 ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு அவரது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.திருமணத்திற்கு மிகவும் முக்கியமானவர்களுக்கும்,நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தார்.

திரையுலகமே கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது திருமணம் மிகவும் எளிமையாகவே நடைபெற்றது. திரையுலகில் அவர் பல தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பில் இருந்தாலும்,இல்லற வாழ்க்கையை பொறுத்தவரை ஒரு இல்ல தலைவனாகவும்,குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் திகழவே விரும்புவார்.

மேலும்,பிற நடிகர்களுக்கும்,இளம் தலைமுறையினருக்கும் திருமண வாழ்வில் லதா-ரஜினிகாந்த் தம்பதியினர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.அவர்களின் 38 வது திருமண நாளிற்கு ரசிகர்கள் சார்பில் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

 

Exit mobile version