தர்பார் படத்துக்கு இந்த நிலைமையா ?

ஏ. ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ,நயன்தாரா நடிப்பில் நேற்று தர்பார் படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரை ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்ததை  விட இந்த படத்தில் வேற லெவல் மாஸ் காட்டியுள்ளார் என்று பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் படத்தைப் பற்றிய விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தர்பார் படத்திற்கு போட்டியாக எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாத நிலையிலும்,  படத்தின் வசூல் குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகின்றது. நேற்று சென்னையில் மட்டும் 2.27 கோடி  வசூலை தர்பார் படம் ஈட்டியுள்ளது. இது விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் தர்பார் படம் 15 முதல் 18 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் தான் முதல்நாளில் 2.64 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version