'தலைவர் 168'வது படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன் தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் தர்பார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தர்பார் படத்தின் pre production வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைவர் 168 படத்தை பற்றிய அப்டேட்கள் கசிந்து வருகிறது.

தலைவர் 168 படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.இந்த படத்தில் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தலைவர் 168வது படத்தில் ரஜினிக்கு மனைவியாக மீனா மற்றும் குஷ்பு நடிக்கவுள்ளதாகவும்,  கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாக வில்லை.விரைவில் படம் குறித்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version