நடிகர் ரஜினியின் அறிவிப்பு புதியது அல்ல : திருமாவளவன்

வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த நடிகர் ரஜினியின் அறிவிப்பு புதியது அல்ல என்றும், ஏற்கனவே அறிவித்த அறிவிப்பைத்தான் தற்போது அறிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை தெரிவிக்காமல் குழப்பமான வழிகாட்டுதலை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version