இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் இரட்டை இலையே வெற்றி பெறும் என்றார். பாஜகவுக்கு அதிமுக துணை போகிறதா என்ற கேள்விக்கு, நாட்டை ஆள்வது பாஜக, நாட்டின் பிரதமர் மோடி என்று கூறிய அவர் நிதி பெறுவதற்கு மோடியை தான் அணுக முடியுமே தவிர அமெரிக்க அதிபரையா பார்க்க முடியும் என அவர் பதில் கேள்வி எழுப்பினார்.